தமிழக பாஜக தலைவர் எஸ்.வி.சேகர்…!மத்திய அமைச்சர் வாழ்த்து …!கொதித்த தமிழிசை

Published by
Venu

தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் சிறப்பாக பணியாற்றுவேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்த நிலையில், அதற்கு மிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் பதில் அளித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது.

Image result for sv sekar

இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.வி சேகர் கருத்து ஒன்றை தெரிவித்தார் .அவர் கூறுகையில், பாஜக சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறது.2019ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார்.எல்லாவற்றையும் ஒரே போல் பார்க்க கூடாது. என் மீது உள்ள வழக்கை சட்டப்படி எதிர் கொண்டு வெற்றி பெறுவேன்.

தமிழக பாஜக தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் ஏற்றுக்கொண்டு தற்போது உள்ள சதவீதத்தை விட அதிகமான சதவீதம் ஓட்டு வாங்கி காட்ட முடியும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.ஆனால் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி பாஜக தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்ற கருத்து உள்ளதால் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லை என்கிறார்களே என்ற கேள்வி ஆகும்.பின்னர் அவர் தனது பதிலை மாற்றி கூறினார்.மேலும் நம்மை அழைத்தால் தான் போக முடியும்.அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லணுமா?அவரை என்னைவிட வயதில் சிறியவர் என்றும் கூறினார்.

பின்னர்  எஸ்.வி.சேகர் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,பா.ஜ.க. தமிழக தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள எஸ்.வி.சேகருக்கு வாழ்த்துகள்.அதேபோல் எஸ்.வி.சேகர் பா.ஜ.க.வில் அடிமட்ட தொண்டரும் தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்பதை புரிந்து கொண்டதற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.வி.சேகர் கருத்து தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் சிறப்பாக பணியாற்றுவேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை,எஸ்.வி. சேகர் சிரிப்பு நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பார். தமிழக பாஜக தலைவர் பதவி என்பது அவ்வளவு சாதாரணமல்ல என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக பாஜக தலைவராக தமிழிசை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2014 ஆகஸ்ட் முதல் இருந்து வருகிறார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago