தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார்.
பிரதமர் மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கடந்த மே 30-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவரது பதிவில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என பதிவிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். pariah என்ற சொல்லின் பொருளை விளக்கும் வகையில், அண்ணாமலை டிக்சனரியின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இருப்பினும், இருப்பினும், அண்ணாமலை மீது பல இடங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்ணாமலை மீது மேலும் ஒரு புகார் மனுவை தந்தை பெரியார் திராவிடர் கழக அளித்துள்ளது.