பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

Published by
Venu

பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஆகவே தமிழ்நாட்டில்  தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தார். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி  என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

46 minutes ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

1 hour ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

2 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

2 hours ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

3 hours ago