பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஆகவே தமிழ்நாட்டில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தார். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.