தமிழக முதல்வர் தனது கருத்தை மாற்றி மாற்றி பேசுகிறார்.! அண்ணாமலை விமர்சனம்.! 

Annamalai BJP State President

தமிழக முதல்வர் தனது கருத்தை மாற்றி மாற்றி பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் மாதம் 2018ஆம் ஆண்டு  தனது டிவிட்டர் பக்கத்தில், அதிமுக ஆட்சி காலத்தில், குட்கா வழக்கில் முறைகேடு தொடர்பாக அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய (அப்போதைய) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தால் ஆளுநர், அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

அதேபோல, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஊழல் பற்றி பொது மேடையில் ஆளுநர் பேசி எந்த பயனும் இல்லை. அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், சட்ட விரோதமாக செயல்படுபவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆனால் தற்போது ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என அவர் மாற்றிப் பேசுகிறார் என்று முதல்வர் மீது தனது விமர்சனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் 1971 இல் உச்சநீதிமன்றமானது, ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநருக்கு அதனை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரமும் இருக்கிறது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என குறிப்பிட்டு பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்