கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!
கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.
நேற்று நெல்லையில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் 250-வது நினைவு நாளையொட்டி ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலையணிவித்து மரியாதையை செலுத்தினர்.
சாலை மார்க்கமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் மாலை அணிவித்த நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 95 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.