மதுரை எம்பி பற்றி அவதூறு பதிவு.! பாஜக மாநிலசெயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது.!
தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளராக பொறுப்பில் இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி.சு வெங்கடேசன் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஒருவரால் தூய்மை பணியாளரின் உயிர் பரிபோனது என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் மௌனம் காக்கிறார் என்றும் பதிவிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை அடுத்து நேற்று இரவு சென்னை தி-நகரில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து சென்றனர். இதனை எதிர்த்து பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.