தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என சிடி ரவி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதறகான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து 20 தொகுதிகளிள் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மாநில தலைவர் எல் முருகன் டெல்லி சென்றுள்ளார்.
ஆகையால், தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…