குழந்தை விற்பனை வழக்கு : 4 பேருக்கு ஜாமின்
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று குழந்தைகள் விற்பனை வழக்கில் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில்,குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, இவரின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் லீலாவுக்கு ஜாமின் வழங்கி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.