தமிழக சட்டபேரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது என்று சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தொடர் நடைபெற்றது.கடைசி நாள் கூட்டத்தில் , வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.
இந்நிலையில் சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக சட்டபேரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…