தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது

தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தொடர் நடைபெற்றது.கடைசி நாள் கூட்டத்தில் , வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். எனவே தமிழக சட்டபேரவை கூட்டம்இன்று (மார்ச் 9 ஆம் தேதி) மீண்டும் கூடுகிறது.கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025