தமிழக சட்டமன்ற தேர்தல் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை.!
சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி 234 தொகுதி தேமுதிக பொறுப்பாளர்களுடன் அக்கட்சி தலைவார் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். கூட்டணி, தொகுதிபங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்டது. அந்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. தேமுதிக இதுவரை 3 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 41 இடங்களை பெற்றுக் கொண்டு களம் இறங்கிய தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது.
முதல் இரண்டு தேர்தல்களில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி இருந்த தேமுதிக கடந்த சட்டமன்ற தேர்தல் மட்டுமே எதிர்பார்த்தபடி அமையவில்லை. தற்போது இரு பெரும் தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தல் தேமுதிகவுக்கு முக்கியமான தேர்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.