தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!!

Default Image

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருபெரும் தலைவர்கள் இல்லாமல் முதல் முறையாக தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 71.49% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் கண்டனர்.

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எண்ணப்பட்டது. இதில் ஆரம்ப முதலே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. அதன்படி, இறுதியாக திமுக 158 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தது. அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக 5, பாஜக 4, மற்றவை 1 என முன்னிலையில் இருந்தது.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 18, மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 4 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி முடிவுகளை இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதில், திமுக 133 இடங்களிலும், காங்கிரஸ் 18, விசிக 4, சிபிஎம் 2, சிபிஐ 2 என 159 இடங்களை வென்றுள்ளது.

இதையடுத்து அதிமுக 66 இடங்களிலும், பாஜக 4, பாமக 5 என மொத்தம் 75 இடங்களை வென்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய தகவல்களின்படி, அமோக வெற்றி பெற்ற திமுக 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட பிற கட்சிகளின் வாக்கு விழுக்காடு விவரங்களின்படி காங்கிரஸ் 4.27%, பாமக 3.80%, பாஜக 2.62%, தேமுதிக 0.43%, சிபிஐ 1.09%, சிபிஎம் 0.85%, ஐ.யு.எம்.எல் 0.48% என்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 0.75% வாக்குகள் மற்றும் மற்றவர்களுக்கு 14.46% வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஆகையால் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, 10 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமையவுள்ளது. குறிப்பாக முதல் முறையாக வரும் 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ளார். முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்