5000 கோடி வரை முதலீடு செய்ய தமிழகத்தில் ஒப்புதல்!
தமிழகத்தின் பொருளாதாரம் பின்தங்கியுள்ளதால் 5000 கோடி வரை முதலீடு பெற தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில்கடந்த பல மாதங்களாக ஊரடங்கில் தான் மக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலும் இதே நிலை தொடர்வதால் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
எனவே, தமிழகத்தில் நிறுவனங்கள் 5000 கோடி வரை முதலீடு பெற்று தொழில் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் பொருட்டு டைசல் நிறுவனம் 900 கோடியை 3 கட்டமாக முதலீடு செய்கிறது. 330 பேரின் வேலை வாய்ப்புக்காக கோவை ஐ.டி.சி நிறுவனம் 515 கோடியையும், 2925 பேருக்கு வேலை கிடைக்க 600 கோடியை லித்தியம் தயாரிக்கும் நிறுவனமும் முதலீடாக பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது போல 6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.