தமிழ்நாட்டுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவை! – ராமதாஸ்

Default Image

தமிழ்நாட்டுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. 

பண்டிகை காலங்கள் என்றாலே, நாம் வெடி இல்லாமல் கொண்டாடுவதில்லை. இந்த வெடியால் பல தீமைகள் ஏற்படும் என்றாலும், வெடி இல்லாத ஒரு பண்டிகையை, நாம் விரும்புவதில்லை. ஒவ்வொரு பண்டிகை நாட்களின் போதும், இந்த வெடியால் உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. இருந்தாலும், ஆவாரை நாம் தவிர்ப்பதற்கு நம் மனது தயங்க தான் செய்கிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘சுற்றுசூழல் பாதிப்பை தடுக்க, தீப ஒளிக்கு ராஜஸ்தானில், பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதும், தில்லியில் பசுமை பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதும், வரவேற்கத்தக்கவை. தமிழ்நாட்டிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவை. தீபஒளிக்கு, தீபம் மட்டும் ஏற்றுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்