காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ளதால் கடலில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் சூறைக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
ஆனால் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன் கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு அவர்களிடம் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களும் இல்லாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஓகி புயலின் போது இதே போன்ற சூழலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டதால் மீனவ கிராமங்களை மீண்டும் அச்சம் சூழ்ந்துள்ளது.
புயல் சின்னத்தால் நெல்லை மாவட்டம் இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,100 நாட்டுப்படகுகள் இன்றும் கடலுக்குச் செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே வலுவான நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளது என்றும், அடுத்த 36 மணிநேரத்தில் மாலத்தீவு அருகே குறைந்த காற்றழுத்தமாக மாறும் என்றும் தெற்கு கேரளா, மாலத்தீவு ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையம் இன்று முதல் மார்ச் 15ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…