தமிழ் மொழி வெறும் 300 ஆண்டுகள் தான் பழமையானதா – புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் சர்ச்சை!
12 ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் மொழி 300 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12 ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதில். ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில் பாடம் ஓன்று உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக தமிழ் பேராசியரான ஜார்ஜ் எல்.ஹார்ட் எழுதியுள்ளார். இதில், தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் என்ற பகுதி உள்ளது.
அதில், உலகின் பழங்கால மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் முன்பு உருவானதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேபோல், மற்ற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு 1250 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு 1500 ஆண்டிலும், சம்ஸ்கிருத மொழி கி.மு 2000 ஆண்டு முன்பு உருவானதாகவும் தகவல் உள்ளது.
மேலும் , தமிழின் மிக பழமையான இலக்கியமான தொல்காப்பியம் கி.மு 2,200 ஆண்டுகள் பழமையானது என்றும் உள்ளது.உருவானது . உலகில் இருக்கும் மொழிகளில் தமிழ் மொழி சுமார் 5,000 ஆண்டுகள் மிகவும் பழமையானது என்று தமிழ் அறிஞர்கள் பலர் கூறி வரும் நிலையில் புதிய பாடத்திட்டத்தில் உள்ள இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.