அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவை காட்டும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் ஆசிரியர் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் இந்த முறையை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மொழி மட்டும் இருக்கும் வகையில் இருந்தது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி மொழி இருந்தது. இதற்க்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போன்று இனி தவறுகள் நடக்காது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் கருவியில் தமிழ் உட்பட 9 மொழிகள் இருக்கும்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…