தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி-திருமாவளவன்
தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம் 4000 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி. பாடத்திட்டத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன், இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக், என்.ஐ.ஏ, ஆர்.டி.ஐ உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார்.