தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,’உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலக மொழி கற்பிக்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்ளிட்ட பல மொழிகள் கற்று தரப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரஞ்சு, இந்தி மொழி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் மாணவர்களே விருப்ப பாடத்தை எழுதி கொடுத்து தேர்வு செய்கிறார்கள்.இந்த நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய மொழிப் பாடம் அல்ல.விருப்ப பாடம் ஆகும்.தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு ஆகும்.இந்தியை திணிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.