தமிழ்நாடு அரசுப்பணிகளில் சேர தமிழ் கட்டாயம்! மசோதா நிறைவேற்றம்.!
தமிழ்நாடு அரசுப்பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம், என சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.
தமிழ்நாட்டில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்வதற்கு தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்ட சட்டமசோதா, தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப்பணியாளர்கள் பணிகளில் சேர நிபந்தனை குறித்து, நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதனையடுத்து இனி தமிழ்நாடு அரசுப்பணிகளில் சேர, தமிழ் கட்டாயமாகிறது, மேலும் ஏற்கனவே பணியில் இருந்தால், பணியில் சேர்ந்த நாளிலிருந்து 2 ஆண்டுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.