அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்வர் முயற்சி. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆறு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்காக நிதி ஒதுக்கியுள்ளது .தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.