சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் : அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை…!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில், மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்து பேசினார்.
லோதி சாலையில் அமைந்துள்ள மத்திய மின்னணு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த கோரிக்கை மனு ஒன்றினை அவர் அளித்தார். இந்த சந்திப்பின் போது, அதிமுக எம்.பிக்கள் சந்திரகாசி, ஏழுமலை, ராஜேந்திரன், அருண்மொழி தேவன், ஹரி ஆகியோர் உடனிருந்தனர்.