தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்- நிதியமைச்சர்.!
2023-24க்கான தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2023-24 ஐ இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
இந்த உரையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான அறிவிப்பாக, அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்டும், சென்னை சங்கமம் கலைவிழா மேலும் சில முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும், நாட்டுப்புறக்கலைஞர்களுக்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது, தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்துவது மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண வசதி உள்ளிட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் தனது உரையில் அறிவித்தார்.