#Breaking:தமிழை பயிற்று மொழியாக்க இயலாது – மத்திய அரசு தகவல்!
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழை கட்டாய பாடமாக்கவும்,பயிற்று மொழியாக்கவும் கோரிய கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கில்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.
இதனையடுத்து,இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.