தமிழ் மண்ணிலே தமிழ் புறக்கணிப்பா???திருவாரூரில் பற்றிய பொறிப்பு விவகாரம்.!

Default Image

 திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பொறியாளர் அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகையில் எழுதப் பட்டுள்ள சம்பவம் சர்ச்சையாகியது தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் தற்போது அளிக்கப்பட்டது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மொழி கொள்கை என்பதன் மூலமாக இந்தி மொழியை திணிக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்துவருகிறது. மேலும் மத்திய அரசு  நடைமுறைப்படுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி திணிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் தேசிய வங்கிகள், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் மாநில மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அண்மைக்காலமாகவே சர்ச்சை எழுந்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூரில் 150 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் ரயில் நிலைய வளாகத்தில்  புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த முதல்நிலை பொறியாளர் அலுவலக கட்டிடத்தின் பெயர் பலகையில் தமிழ்மொழி இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு எழுத்தப்பட்டது.இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடும் எதிர்ப்பினால் இரவோடு இரவாக பெயர் பலகை முழுவதும்  சுண்ணாம்பு கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இச்சம்பவம் குறித்து உதவி கோட்ட பொறியாளரிடம் கேள்வி எழுப்பும்போது பெயிண்டர் வசதி இல்லை என்பதால் வேறு இடத்திலிருந்து பெயிண்டர் வர வழைத்து பெயர்பலகை எழுதப்பட்டது. அப்படி எழுதுகையில் இடம் இல்லாத காரணத்தினால் தான் தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. தமிழ்மொழி இல்லாதது குறித்து புகார் எழுந்ததல் முற்றிலுமாக பெயர் பலகை அழிக்கப்பட்டு தற்போது மீண்டும் புதியதாக மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகை எழுதப்படும் என்று தெரிவித்தார்.


Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்