நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை…!வேண்டுமென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம்…!தமிழக பாஜக தலைவர் தமிழிசை அதிரடி
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் கண்துடைப்பு ஆகும். நாடகம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பது பற்றி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம்.பயிர் பாதுகாப்பு திட்டத்தில் மாற்றம் தேவை எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை. வேண்டுமென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம். பிக்பாஸில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்தார், அன்றே விலகிவிட்டார் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.