தொடர்ந்து 2-வது இடத்தில் தமிழகம்! கொரோனா தடுப்பு பணியில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு!
கொரோனா தடுப்பு பணி, ஒருங்கிணைத்தல், மீட்பு பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோன பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனையடுத்து, கொரோனா பரவலை தடுக்க 15 சிறப்பு மருத்துவர்கள் கொண்டு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி, ஒருங்கிணைத்தல், மீட்பு பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவில், அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாகம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.