தாம்பரத்தில் மழை,வெள்ள பாதிப்பு-மீட்பு பணிக்காக 8 அதிகாரிகள் நியமனம்!

Published by
Edison

தாம்பரம்:மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 8 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனையடுத்து,மீண்டும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது.மேலும் சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.குறிப்பாக,இந்த மழையின் காரணமாக தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.மருத்துவமனை செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில்,தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள 8 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,

  • G. ஆனந்த ஜோதி – நகராட்சி பொறியாளர்,
  • A.R. மொடறிதீன் – சுகாதார அலுவர் ,
  • திருமதி.பென்சி ஞாளலதா -நகராட்சி பொறியாளர்,
  • C.அறிவுச்செல்வம் – சுகாதார் அலுவலர்,
  • நா.பிரபாகரன் – நகராட்சி பொறியாளர்,
  • திரு.சுந்தரராஜன் – சுகாதார ஆய்வர்,
  • B.வெங்கிடேசன்- நகராட்சி பொறியாளர்
  • K.சிவக்குமார் – சுகாதார ஆய்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்,தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நோக்கில் குழுக்களாக பிரித்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.

அதன்படி,அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் வெள்ளம் குழும் பகுதிகளை கண்காணித்திடவும், அடிப்படை வசதிகளுடன் கூடிய வெள்ள நிவாரண முகாம்களை அமைத்திடவும், பொதுமக்கள் தங்கும்பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உணவு வழங்கிடவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தினசரி பதிவு செய்து அறிக்கையாக ஆணையாளர், தாம்பரம் மாநகராட்சி அவர்களுக்கு சமர்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Recent Posts

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

41 minutes ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

2 hours ago

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

3 hours ago

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

3 hours ago

“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

3 hours ago