முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாஜக கட்சியின் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை…!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாஅஜாக் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி , வி.கே.சிங், எல்.முருகன் ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 முதல் 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. மற்ற கட்சிகளான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிக-வின் நிலைப்பாடு தான் கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.