பள்ளி தேர்வு குறித்து பேசிய முதல்வர்.!
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். முக்கியமாக சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழக்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றிய 94 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவித்துள்ளனர். சுமார் 72 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 144 தடையை மீறி வெளியே வாகனங்களில் சுற்றியதுக்கு சுமார் 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14க்கு பிறகு கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.