கருணாஸ் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவும் ,காவல்துறை தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.
செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதன் பின் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.பின்னர் அந்த வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.கருணாஸ் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவும் ,காவல்துறை தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.இந்நிலையில் கருணாஸுக்கு ஜாமின் கிடைக்குமா அல்லது போலீஸ் கஸ்டடிக்கு நீதிபதிகள் அனுமதி அளிப்பார்களா என்பது இன்று தான் தெரியும்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…