செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

Default Image

தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள செல்பி மோகத்தால் ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீதங்களால் இளைஞர்கள் பலி என்ற செய்தியை அவ்வப்போது நம் படித்து வருகிறோம்.

இந்நிலையில்,உயிருக்கு ஆபத்தான இச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.மேலும், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

இந்த நிலையில்,ரயிலில் பயணம் செய்வோருக்கான கடும் விதிகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,ரயிலில் தொங்கியபடி பயணம் செய்தால் 3 மாதம் சிறை விதிக்கப்படும் என்றும்,அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதைப்போல,ரயில் தண்டவாளங்கள் அல்லது ரயில் இஞ்சின் அருகே சென்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்