ECS பணத்தை உடனே எடுத்து விடுங்கள் – வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி
உள்ள பணத்தை உடனே எடுத்து விடுங்கள் என்று வங்கி அதிகாரிகள் சங்கதின் தாமஸ் ஃபிராங்கோ தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது , அவர் ரெப்போ விகிதம் 15.5 விகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது எனவும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் ஈஎம்ஐ கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வங்கி அதிகாரிகள் சங்கதின் தாமஸ் ஃபிராங்கோ கூறுகையில்,ECS என்பது எலெக்ட்ரானிக் கிரெடிட்.அதாவது உங்களது வங்கி கணக்கில் நீங்கள் லோன் வாங்கியிருந்தால் அதிலிருந்து ஈஎம்ஐ பிடிப்பார்கள்.அதை பிடிக்காமல் இருக்க உடனடியாக பணத்தை எடுப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.