குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என சீமான் கேள்வி.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பை ஏன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் எடுக்கவில்லை. குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள். குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல், உள்ளிட்டவைகளை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது, அதனால், அவர்கள் இதை எடுப்பதில்லை.
குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் கிடைக்க பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றுதான் இடஒதுக்கீடு. எது உண்மையான சமூக நீதி என்று தெரியவில்லை. சமூகத்துக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான நீதி வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள். சமூக நீதியை பேசிய இந்த மாநிலத்தில் இதுவரை எடுக்கவில்லை. சமூக நீதியை பேசாத பீகார் மாநிலத்தில் எடுத்து வருகிறார்கள். தனியார்மயப்படுத்துவதில் இட ஒதுக்கீடு பயன்தராது என்றும் தெரிவித்துள்ளார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…