கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.பின் எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.இதற்கு பலரும் தங்களது கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், முருக கடவுளையும் ,அவரது பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் ஒளிபரப்பு செய்தது அதிர்ச்சியும் ,வருத்தமும் அளிக்கிறது.மத நல்லிணக்கத்தையும் , இறை நம்பிக்கையும் அவமதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இணையதளங்களை சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் குறித்து புகார் வருவதற்கு முன்னர் போலீசார் சம்பந்தப்பட்டோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…