கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஓ.பன்னீர்செல்வம்.!

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது.
புதிய கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மொத்தம் கிட்டத்தட்ட 3,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கேரளாவில் ஒருவர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா?
இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம், மோசமான நிலையில் உள்ள மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மழை காரணமாக அரசு மருத்துவமனைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில், குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/3D5b709lYY
— O Panneerselvam (@OfficeOfOPS) December 23, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025