அபராத தொகையை சித்த மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட் கிளை.
நீதிமன்றம் உத்தரவை பின்பற்றவில்லை என அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை. அபராத தொகையை சித்த மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, ஆனந்தகுளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் தாசில்தாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்காக அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையர், தாசில்தார் நீதிமன்றத்தில் ஆஜரானர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. அம்பாசமுத்திரம் ஆனந்தகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடும் நடவடிக்கை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…