விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் திட்டம் – டாஃபே நிறுவனம் அறிவிப்பு..!

Default Image

தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை டாஃபே நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில்,தமிழக அரசு மற்றும் டாஃபே நிறுவனத்தின் ஜெ பார்ம் ஆகியவை இணைந்து,சிறு மற்றும் குறு விவசாயிகள்,தங்களது அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாட்களுக்கு,மாஸே பர்குசன் மற்றும் எய்ச்சர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி வழங்க உள்ளது.

இதுகுறித்து,டாஃபே நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் கூறுகையில்,”தமிழக அரசின் ஊக்கமும் ஆதரவும் கொண்டு,தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசமாக வாடகை சேவைகளை வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.இந்த முக்கியமான நேரம் மற்றும் முக்கியமான பயிர் பருவத்தின் மூலம் 2 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான உரிமையாளர்களைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு “இலவசமாக” வாடகை அடிப்படையில் 16,500 மாஸ்ஸி பெர்குசன் மற்றும் எய்ச்சர் டிராக்டர்களை,26,800 பண்ணை கருவிகளுடன் வழங்க உள்ளோம்.

இதனால்,இந்த திட்டமானது,மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சுமார் 50,000 விவசாயிகளுக்கு பயனளிக்கும்.

அதன்படி,தமிழக அரசின் உழவன் செயலி(App) அல்லது கட்டணமில்லா ஹெல்ப்லைன் 1800-4200-100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள்,டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கலாம்.

அதுமட்டுமல்லாமல்,முதல்வர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் உழவர் நலனில் ஆதரவு அளித்ததற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ,மேலும்,கொரோனா நிவாரணத்திற்காக,டாஃபே நிறுவனம் இதுவரை ரூ.15 கோடி பங்களிப்பு செய்துள்ளது”,என்று கூறினார்.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்