பரபரப்பு.! குடியுரிமைக்கு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்ட பெண்கள் கைது.!

Default Image
  • சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போடும் போராட்டம் நடைபெற்றது.
  • அந்த கோலத்தில் AGAINST CAA , AGAINST NRP என எழுதி அவர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக தொண்டர்கள் போன்றவர்கள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் சில இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் வன்முறையிலும் முடிகிறது.

தமிழகத்திலும் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஐஐடி கல்லூரியில் படிக்கும் ஜெர்மன் மாணவன் பங்குபெற்று CAA-க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை நாட்டை விட்டே அனுப்பிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்தது என தெரிவிக்கப்படுகிறது.

விதிமுறை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மனி மாணவர் இந்திய பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றம்.!

இந்நிலையில், சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் , பெரியவர்கள் என பலரும் ஈடுபட்டனர். இந்த போராட்டம் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஒரு ஆண் நான்கு பெண்கள் என ஐந்து பேரை தடுத்து நிறுத்தி போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற காவலர்கள் பின்னர் விடுவித்தனர். அந்த கோலத்தில் AGAINST CAA , AGAINST NRP என எழுதி அவர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்