தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக இன்று காலை 7மணி முதல் வாக்குபதிவு தொடங்கியது.
இன்று காலை முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சிறிது நேரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஈக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கான வாக்குசீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி வாக்கு சீட்டினை வீசி எரிந்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…