பரபரப்பு.! கவுன்சிலர் பதவியேற்றத்துடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய பொறியியல் பட்டதாரி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்று வந்தது.
  • அதில் பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்று, கவுன்சிலர் பதவி ஏற்றத்துடன் சுவர் ஏறி ஓடிய தப்பி ஓடியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, வெற்றி வேட்பாளர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழகத்தில் இன்று பதிவேற்பு விழா நடந்து வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இன்று அவர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டு பதவி ஏற்றவுடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். பின்னர் சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவை பெற பிற கட்சிகள் தீவிரம் காட்டி வந்ததால், அவர் கவுன்சிலர் பதவியேற்றத்துடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடியுள்ளார், பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காரில் ஏற்றி சென்றனர். இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

3 minutes ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

43 minutes ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

2 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

3 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

3 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

4 hours ago