பரபரப்பு.! கவுன்சிலர் பதவியேற்றத்துடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய பொறியியல் பட்டதாரி.!
- மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்று வந்தது.
- அதில் பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்று, கவுன்சிலர் பதவி ஏற்றத்துடன் சுவர் ஏறி ஓடிய தப்பி ஓடியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, வெற்றி வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழகத்தில் இன்று பதிவேற்பு விழா நடந்து வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இன்று அவர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டு பதவி ஏற்றவுடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். பின்னர் சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவை பெற பிற கட்சிகள் தீவிரம் காட்டி வந்ததால், அவர் கவுன்சிலர் பதவியேற்றத்துடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடியுள்ளார், பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காரில் ஏற்றி சென்றனர். இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.