நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது எனவும் அந்த மேடையில் தெரிவித்திருந்தார். பின்னர் ரஜினியின் இந்த பேச்சிக்கு ஆங்காகே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை கண்டித்து கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23.1.2020 தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தற்போது மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி ஆதித் தமிழர் கட்சியினர் நடுரோட்டில் ரஜினியின் உருவ பொம்மையை வைத்து எரித்தனர். இதனிடையே ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து அவர்களை வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மதுரை பேருந்து நிலையம் பரபரப்பு காணப்பட்டது.
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…