த.வெ.க மாநாடு : தூத்துக்குடியிலிருந்து திரள சென்ற தொண்டர்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு பல தொண்டர்கள் புறப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி : த.வெ.க தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தலைமையில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர் தலைமையில் மாநாட்டுக்கு தொண்டர்கள் கிளம்பி இருக்கிறார்கள். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட தொண்டர்கள் பலரும் அக்டோபர் 26 சனிக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மாநாட்டிற்கு புறப்பட்டனர்.
அவர்கள் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக , பல்வேறுவகையான பேருந்து ,வேன் , மற்றும் கார், ஏற்ப்பாடு செய்யபட்டு இருக்கிறது. அதைப்போல, கட்சி தலைமை அறிவுறுத்தலின் படி ஒவ்வரு வாகனத்தில் வரும் தொண்டர்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, 18 வயதுக்கு உட்பட்டவரகள், 50 வயது மேற்பட்டவர்கள், கற்பிணி பெண்கள் மற்றும் மது அருந்தியவர்கள் யாரேனும் உள்ளார்களா என சோதனை செய்து தொண்டர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவதற்காக ஒவ்வரு வாகனத்திலும் தலா இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டு உள்ளார்கள்.
மேலும், வாகனத்தில் வரும் தொண்டர்களின் பெயர்,ஆதார் எண் மற்றும் அவர்களின் கைபேசி எண், அடங்கிய முழு விவரம் ஒப்படைக்க பட்டுள்ளது, வாகனத்தில் வரும் அனைவரும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரும் தொண்டர்கள் அனைவரும் இன்று விழுப்புரம் சென்று அடைந்துள்ள நிலையில், மண்டபம் முதல் . மாநாடு நடைபெறும் திடல் அடையும் வரையில், தொண்டர்களுக்கு தேவையான , டீ , காலை உணவு மற்றும் மதிய உணவு என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.