கட்சி பெயரில் ‘க்’ சேர்க்க த.வெ.க. தலைவர் விஜய் முடிவு?
தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தனர். அந்த வகையில், கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” இலக்கணப்பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதுதான் கட்சிக்கு அழகு எனக்கூறி கட்சியின் பெயரில் மாற்றம் செய்ய (தமிழக வெற்றிக் கழகம்) விஜய் ஒப்புதல் அளித்துள்ளாராம். இதற்காக, கட்சியின் முக்கிய குழு இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
சமீபத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடித்தனார். அதில், 2026 சட்டசபை தேர்தல் தான் தமது இலக்கு என்றும், 2026 தேர்தல் வெற்றிக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று கூறியதோடு, 2026-ல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் என்று கூறிஉள்ளார்.
2026 இலக்கு…முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் – புஸ்ஸி ஆனந்த்!
இதனால், மக்களவைத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் கொடி, சின்னம், கொள்கை உள்ளிட்டவை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.