3-வது முறையாக பதவியேற்கும் மோடிக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து..!
![TVK Vijay Wishes PM Modi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/06/TVK-Vijay-Wishes-PM-Modi-file-image.webp)
த.வெ.க விஜய்: இந்தியாவில் உள்ள மொத்த 543 தொகுதிகளிலும் 7- கட்டங்களாக தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் கடந்த ஜூன்-4 வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் நரேந்திர மோடி 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
அவர் பதவியேற்கும் விழாவானது நேற்று மாலை நடந்தது, 3-வது முறையாக பதவியேற்கும் மோடிக்கு உலகெங்கிலும் இருந்து பல நாட்டுகளின் பிரதமர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது. இந்நிலையில், தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் அவரது க்ஸ் (X) தளத்தில் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் X தளத்தில், “இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுக் கொண்ட திரு. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என பதிவிட்டிருந்தார்.
I extend my congratulations to Thiru. @narendramodi Avl on being sworn in as @PMOIndia for the third consecutive term.
— TVK Vijay (@tvkvijayhq) June 9, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)