த.வெ.க மாநாடு : அமைக்கப்பட்ட திடல்…ஆபத்தான முறையில் வீடியோ எடுக்கும் மக்கள்!
வி சாலை வழியாக செல்லும் பலரும் த.வெ.க மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டதை பார்த்து ஆபத்தை உணராமல் வாகனத்தில் சென்றுகொண்டே புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
விழுப்புரம் : தமிழக மக்களுடைய ஒட்டுமொத்த கவனமும் நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வைத்து நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தான் இருக்கிறது. இது கட்சியின் முதல் மாநாடு என்ற காரணத்தால் பல மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, அவர்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு கட்சித் தலைவர் விஜய் வேண்டுகோள் ஒன்றை வைத்து இருந்தார். அதாவது ” இருசக்கர வாகனப் பயணத்தைத் தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தது இருந்தார்.
இந்த சூழலில், மாநாட்டுத் திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதை பார்த்து பொதுமக்கள் பலரும் வியந்துபோய் வாகனத்தில் அந்த வழியாகப் போகும் போது தங்களுடைய போனை எடுத்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். ஒரு சிலர் அந்த பகுதியில் தங்களுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
அப்படி நிறுத்தி எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒரு சிலர் வாகனத்தை ஒட்டிக்கொண்டே ஆபத்தை உணராமல் தங்களுடைய போன்களை எடுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து வருகிறார்கள். ஒரு சிலர் வேண்டி ஒட்டிக்கொண்டு ஒற்றைகையையும் விட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் வாகனத்தைக் கவனிக்காமலிருந்தால் அசம்பாவிதம் நடந்துவிடும் என்பதால் இது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும் எனக் கட்சி தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.