த.வெ.க. மாநாடு திடலில் தற்காலிக மொபைல் டவர்! இனி சிக்னல் பிரச்சினை இருக்காது!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் தற்காலிக மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மாநாடுக்கு வருகை தருபவர்கள் வாகனம் நிறுத்தும் இடம் முதல் குடிக்கத் தண்ணீர் வழங்கும் வரை எப்படி எப்படி இருந்தால் அவர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதை யோசித்து அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இன்று மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகுமார் மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொடுத்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி வருகிறோம். சொன்னதற்கு அதிகமாகவே தண்ணீர் வசதி கழிவறை வசதி தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து இருந்தார்.
இதன் மூலம் மாநாட்டுக்கு வருபவர்களுக்குத் தேவையான விஷயங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதைப்போல, மாநாட்டில் மக்கள் அதிகமாக வருகை தரவுள்ளதால் கண்டிப்பாக டவர் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே, டவர் இந்த இடத்தில் கிடைப்பது என்பது பெரிய தலைவலியாக இருக்கும். இதனால், மக்கள் சிரமத்தை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இதனை முன்பே கருத்தில் கொண்டு மக்கள் சிரமம் எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக மாநாடு நடைபெறும் இடத்திற்கு பக்கத்திலே தற்காலிகமாக டவர் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. எனவே, மாநாட்டுக்கு வருகை தருபவர்களிளுக்கு தங்களுடைய போனில் சிக்னல் பிரச்சினை இருக்காது.
இதன் மூலம் மாநாடுக்கு வருபவர்கள் தங்களுடைய உறவினர்களைத் தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம். அதைப்போல, மாநாடுக்கு ஒன்றாக வருகை தந்தவர்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்றால் கூட தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக மக்களின் நலம் கருதி மாநாடுக்கு இப்படியான வேலைகள் நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாநாட்டுக்கு தற்காலிக சிக்னல் டவர் வைக்கும் அளவிற்கு முன்னேற்ப்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான மற்றும் சிறப்பான நடவடிக்கை எனவும் பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.