இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறுகையில் பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறதுஎன்றும் இந்தியாவில் எவ்வளவு மாநிலங்கள் உள்ளது,அவற்றிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற எந்த விவரமும் நடிகர் ரஜினிகாந்திற்கு தெரியாது, சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு வராது என்று கூறுவதற்கு நடிகர் ரஜினி யார்? இது குறித்து ரஜினி குரல் கூட கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கு நடிகர் ரஜினி யார்? சட்டமன்ற உறுப்பினரா?, கட்சியின் தலைவரா? அவர் ஒரு நடிகர் அவ்வளவு தான் அவர் நடிப்போடு நிறுத்திக் கொள்வது தான் நல்லது. இந்தியாவில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றது,எத்தணை மாநிலங்கள் இருக்கின்றது, இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் எவ்வளவு பணம்? என்று இது குறித்து அவரை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.. யார் யாரை ஏமாற்றுவது? ஏதோ இவர் திரையில் செய்கிற சேட்டைகளைப் பார்த்து அவர் திரையுலகில் வேண்டுமானால் முதலிடம் பிடித்திருக்கலாம்.
அவருக்கு பாலாபிஷேகம் செய்யட்டும் விமர்சையாக நடக்கட்டும் ஏன் வாழைப்பழ அபிஷேகம் கூட நடக்கட்டும் அரசியல் பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை. இப்பொழுது வந்து இஸ்லாமியர்களுக்கு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் சொல்கிறார்.எங்களைத் பாதுகாத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும். எங்களுக்குப் பாடம் சொல்லித்தர அவர் அவராகவே தம்மை ஆசிரியராக நியமிக்க வேண்டாம். உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்று எங்களுக்குத் தெரியும் என்று தா.பாண்டியன் சற்று காட்டமாக கூறியுள்ளார்
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…